மின்சார ஸ்கூட்டர், ஈ-பைக் விபத்துக்களால் 2025-இல் 10 கனடியச் சிறுவர்கள் உயிரிழப்பு

கனடியக் குழந்தைகள் நலக் கண்காணிப்புத் திட்டம்  வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் மின்சார மிதிவண்டிகளைப் (e-bikes) பயன்படுத்தியபோது ஏற்பட்ட படுகாயங்கள் காரணமாக 10 கனடியச் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 குழந்தைகள் நல மருத்துவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், 48 தீவிர காயங்கள் அல்லது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 26 சிறுவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; 12 சிறுவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளானவர்களில் 47% பேருக்குத் தலையிலும், 40% பேருக்குக் கை, கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையில் ஏற்படும் காயங்கள் பெரும்பாலும் நிரந்தர ஊனத்திற்கு வழிவகுப்பதாக மருத்துவர் டேனியல் ரோசென்ஃபீல்ட் (Dr. Daniel Rosenfield) எச்சரித்துள்ளார்.

 காயமடைந்த சிறுவர்களில் 42% பேர் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். சராசரியாக 10 முதல் 12 வயதுடைய குழந்தைகளே அதிகளவில் இத்தகைய விபத்துகளில் சிக்கியுள்ளனர்.  கனடாவின் மாகாணங்களுக்கிடையே இத்தகைய வாகனங்களின் பயன்பாட்டிற்கான வயது வரம்புகள் மற்றும் விதிகளில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் நாடு தழுவிய ஒரே மாதிரியான கடுமையான விதிகள், பாதுகாப்பான வாகன வடிவமைப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Bootstrap