பால்டிமோரில் நடைபெற்ற பிரபல பாடகர் மோர்கன் வாலனின் இசைக்கச்சேரியின் போது, வட கரொலைனாவைச் சேர்ந்த ஜெய்சன் ரீட் (Jayson Reed - 33) என்ற நபர், அங்கு வந்திருந்த குடும்பத்தினர் மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது இரண்டாம் நிலைத் தாக்குதல் தொடர்பான 4 பிரிவுகள் மற்றும் பொது இடத்தில் சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டிராய் கிரேவெல்டிங் என்பவர் தனது மனைவி, சகோதரன் மற்றும் 8, 11 வயதுடைய இரு மருமகள்களுடன் கச்சேரிக்குச் சென்றிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. ரீட் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கச்சேரி தொடங்குவதற்கு முன்பு ரீட் வீடியோ காலில் உரக்கப் பேசியதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும், பின்னர் கச்சேரி நடந்து கொண்டிருக்கும் போதே அவர் கிரேவெல்டிங்கின் மனைவி மற்றும் சிறுமியின் கால்களில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையைத் தொடர்ந்து, வட கரொலைனாவில் உள்ள ரீட் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக மேரிலாந்திற்கு நாடுகடத்தப்பட உள்ளார்.