இத்தாலிய அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளில், பார்மா (Parma) நகருக்கு அருகில் உள்ள மேக்னானி ரோக்கா அருங்காட்சியகத்திற்குள் மார்ச் 22 அன்று இரவில் முகமூடி அணிந்த இரு திருடர்கள் உடைத்து உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது.
செசான், ரெனுவார் மற்றும் மடிஸ் (Cézanne, Renoir, Matisse) ஆகிய பிரபல கலைஞர்களின் மூன்று உயர்மதிப்புமிக்க ஓவியங்கள் திருடப்பட்டன. இவற்றின் கூட்டு மதிப்பு சுமார் €9 மில்லியன் (£7.8 மில்லியன்) ஆகும்.
தேடுதல் வேட்டையின் போது திருடப்பட்ட மூன்று ஓவியங்களையும் இத்தாலிய காவல்துறை மீட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.