ஜனாதிபதி அநுரவின் சட்டத்தரணிகளுடனான சந்திப்பு

ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது ஒரு கூட்டமே ஒன்று திரண்டு தனக்கு எதிராக சதி செய்யுமானால் அந்த தீர்மானம், வாய்ப்பு கை நழுவி போகாமல் அதனை கெட்டியாக பிடித்து தனக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துகாட்டு.

நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கடுமையாக எதிர்த்தது.

ஆனால் ஜனாதிபதி அநுரவோ இன்றைய சந்திப்பிக்கு பிறகு முழு Debate இன் frame யே மாற்றிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்த கேள்வி மிகவும் எளிமையானது தான். தற்போதைய நீதிபதிகளின் பதவிக்காலத்தை ஏன் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது?

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது எந்த அரசாங்கத்திற்கும் அரசியல் ரீதியாக கடினமானது.

காரணம் உடனே அடுத்த கேள்வி வரும் இதனால் யாருக்கு நன்மை? ஏன் இப்போது இந்த தீர்மானம் என்று?

ஆனால் அநுரவின் உரைக்கு பின்னர் இவ்வளவு காலமும் மக்கள் மத்தியில் இருந்த சந்தேகம் எல்லாம் ஒட்டுமொத்தமாக தீர்ந்து இருக்கும்.

எமது முழு நீதித்துறை கட்டமை திருத்த வேண்டுமா, வேண்டாமா?

என்று ஜனாதிபதி கேட்கும் போதே அது அவரது மிகப் பெரிய Rhetorical Victory ஆக மாறிவிட்டது.

ஜனாதிபதி இங்கு நீதிபதிகளின் ஓய்வு வயதை மட்டும் பேசவில்லை.

ஒட்டுமொத்த பொலிஸ் திணைக்களம்,

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு,

சட்டமா அதிபர் திணைக்களம்,

உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்கள், நீதிமன்ற ஊழியர்கள், புதிய நீதிமன்றங்கள், டிஜிட்டல் மயமாக்கல், விசாரணை தாமதங்கள், நிலுவை வழக்குகள் (Backlog)

இவற்றையெல்லாம் ஒரே சங்கிலியில் தொடுத்து அத்தனை Topics ஐயும் தனித்தனியாக கனகச்சிதமாக விளக்குகிறார்.

இதன் மூலம், "நீதிபதிகளுக்கு இரண்டு ஆண்டுகள் கூடுதலாக வழங்குவோம்" என்ற controversial propose ஐ "நீதித்துறை சீர்திருத்தம்" என்ற பெரிய கதையாடலுக்குள் கொண்டு செல்கிறார்.

இது அரசியல் தொடர்பாடலில் மிக பெரிய உத்தி. இதனை அநுர கையாண்ட விதமோ அருமையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரை ஜனாதிபதி பதவியில் உட்கார வைத்து எதனை சாதிக்க போகிறீர்கள் என்று கேட்டு காட்டுகத்து கத்திய கூட்டத்தை பார்த்து இந்த மாதிரியான இடியாப்ப சிக்கலான விடயங்களை இதனை விட வேறு எவராலும் இவ்வாறு இலகுவாக கையாள முடியாது என்பதை புத்தியில் உறைக்கும் படி கூற வேண்டும்.

இதில் இன்னும் ஒன்றை கூறியே ஆக வேண்டும். உரையின் தொடக்கத்திலேயே அவர் BASL-ஐ நோக்கி, "நான் திறந்த மனதுடன் வந்தேன். ஆனால் நீங்கள் காலைலேயே அறிக்கை வெளியிட்டு உங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி விட்டீர்கள் என்று கூறுகிறார்.

இதன் மூலம் உரையாடலுக்குள் செல்லும் முன்பே இரு விம்பத்தை உருவாக்கி விட்டார் ஜனாதிபதி அநுர.

நான் சுமுகமாக கலந்துரையாட தயாராக வந்தேன். ஆனால் நீங்களோ ஏற்கனவே முடிவெடுத்து வந்து விட்டீர்கள் இனி பேசி வேலை என்கிறார். இது Subtle ஆனால் powerful.

அதன்பின் அவர் இன்னொரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.

இந்த தீர்மானத்தை எதிர்க்கும் தீர்மானம் ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் கோரிக்கையா? அல்லது ஒரு சிலரின் விருப்பா என கேட்கிறார்.

இதன் ஊடாக இது உண்மையில் இந்த எதிர்ப்பு யாருக்காக என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் மக்கள் மத்தியில் இலேசாக உருவாக்குகிறார்.

அரசியலில் சில நேரங்களில் இதுவே தீனி போட்டு விடும்.

அதன்பின் அவர் தனது Ethos ஐ உருவாக்குகிறார். "நான் அரசியலமைப்புக்கு வெளியே அதிகாரத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்று கூறி விட்டு சொல்கிறார், நான் எப்போதும் இந்தப் பதவியை விட்டு செல்லத் தயாராக இருக்கும் ஒருவன் என்கிறார்.

இதன் மூலம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவியை நீடிக்க போகிறாரா?" என்ற சந்தேகத்திலிருந்து,

அவரது மேல் இருக்கும் அளவில்லாத நம்பிக்கை இன்னும் ஒருபடி அதிகரிக்கிறார்.

பின்னர் BASL கூறிய விடயத்தை பிடித்துக்கொண்டு வரப்பிரசாதம் பற்றி

அவர் கேட்கிறார். சிறப்பு சலுகையின் எல்லை எது என்று?

சம்பள உயர்வு சிறப்பு சலுகையா?

நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் சிறப்பு சலுகையா?

புதிய நியமனங்களும் அப்படியா?

இதன் மூலம் இது சிலருக்கான சிறப்பு சலுகை என்ற சட்டகத்தை மழுங்கடிகச் செய்து இது ஒருவரைப் பற்றிய தீர்மானம் அல்ல முழு அமைப்பைப் பற்றியது என்ற புதிய topic ஐ உருவாக்குகிறார்.

அதோடு இங்கு முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. இந்த உரையின் emotional turning point தான் உயிர்த்த ஞாயிறு வழக்கு பற்றியது. அதுவரை உரையாடல் abstract ஆகவே இருந்தது.

அரசியலமைப்பு, நீதித்துறையின் சுயாதீனம், ஓய்வு வயது பற்றி பேசி விட்டு திடீரென்று உயிர்த்த ஞாயிறு வழக்குகளுக்கு என்ன ஆகும்?

என்று எளிதில் புரியும் நடைமுறைச் சிக்கலை முன்வைக்கிறார்.

நீதிபதிகள் ஓய்வு பெற்றால் வழக்குகள் திசை மாறும். பதவி உயர்வு வழங்கினால் என்ன நடக்கும் வழங்காவிட்டால் என்ன குளறுபடி வரும் என அத்தனையையும் விளக்கிறார்.

இப்போது ஜனாதிபதி மட்டுமல்ல, எதிர்ப்புத் தெரிவிக்கும் தரப்பும் தங்களுடைய மாற்று தீர்வை விளக்க வேண்டிய நிலை உருவாகிறது உண்மையில் இது எதிர் தரப்பின் வாயை அடைக்கும் ஒருவித உத்தி.

மேலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஜனாதிபதி அத்தனை தரவுகளுடன் வந்தது தான்.

102,000.

72,000.

10,000.

11 நீதிமன்றங்கள்.

110 முதல் 120 வரை.

இவ்வாறு குறிப்பிட்ட எண்ணிக்கைகள் சந்திப்பில் அடுக்கி கொண்டே செல்கிறார்.

இதனால் இந்த உரையை பார்ப்போருக்கு ஜனாதிபதி அநுர விடயங்களை ஆராய்ந்திருக்கிறார் என்பதை உணர்த்தி விட்டது. அதோடு இதுவொன்றும் சாதாரண உரை போல் தெரியவில்லை.

மாறாக ஒரு அமைப்பையே முழுமையாக அலசி ஆராய்ந்து இருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்க வேண்டும்

ஜனாதிபதி அநுர ஒருபடி மேலே சென்று நீதிபதிகளுக்கு விசேட சலுகை அளிக்கப்படுகிறதா என்ற குறுகிய கேள்வியை, இலங்கையின் முழு நீதித்துறையையும் சீர்திருத்த வேண்டுமா. வேண்டாமா?"

என்ற மிகப் பெரிய கேள்வியாக மாற்றுகிறார். அதுவே அவருக்கான political leverage ஐ உருவாக்குகிறது.

எது எப்படியோ கடைசியில் எதிர்தரப்பு சொல்லிக்கொள்ள வேண்டியது

"நாம் மாற்றத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட விடயத்தையே எதிர்க்கிறோம் என்று. ஆனால் ஜனாதிபதி அநுரவோ என்ன நடந்தாலும் பரவாயில்லை அழுகி துர்வாடை அடிக்கும் ஒட்டுமொத்த அமைப்பையே சுத்தம் செய்ய போகிறோம் என்று ஒற்றை காலில் நிற்கிறார்.

இதில் ஒன்றை தெளிவாக விளங்கி கொள்ளலாம் அதாவது ஒரு சிறந்த தலைவர் என்பவர் ஒரு கேள்விக்கு நல்ல பதில் அளிப்பவர் மட்டும் அல்ல.

ஒரு சமூகத்தில் பேசுபொருளாக இருந்த ஒன்றையே ஒட்டுமொத்தமாக மாற்றக்கூடியவர்.

இன்று ஜனாதிபதி அநுரவும் அதனை தான் கனகச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.

Bootstrap