22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சரத்துகளை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதே நாளில் நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் (Judicature Amendment Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இந்தத் திருத்தத்திற்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன. இருப்பினும், அரசாங்கம் இச்சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியாக உள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செவ்வாய்க்கிழமை சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் படி 14 நாட்களுக்குள் இதற்கு எதிராகச் உயர் நீதிமன்றத்தில் சவால் விடுக்க குடிமக்களுக்கு அவகாசம் கிடைக்கும். மனுக்களை விசாரித்து உயர் நீதிமன்றம் 3 முதல் 21 நாட்களுக்குள் தனது தீர்மானத்தைப் பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.

Bootstrap