ஷிரான் பாசிக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்

போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

Bootstrap