இத்தாலி காவல்துறையால் மீட்டெடுக்கப்பட்ட திருடப்பட்ட ஓவியங்கள்

இத்தாலியின் பார்மா  நகருக்கு அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் கடந்த மார்ச் மாதம் திருடப்பட்ட பிரெஞ்சு ஓவியர்களான போல் செசான், ஹென்றி மட்டீஸ் மற்றும் பியர்-ஒகஸ்ட் ரேனோயர் ஆகியோரின் மூன்று அரிய ஓவியங்களை இத்தாலிய கலாச்சார பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு காவல்துறை வெற்றிகரமாக மீட்டுள்ளது.

 பார்மா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் இந்த ஓவியங்கள் மீட்கப்பட்டன. இத்திருட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய 9 மோல்டோவா (Moldovan) நாட்டவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மார்ச் 22-23 இரவில் மாமியானோ டி டிராவர்செட்டோலோவில் உள்ள 'ஃபோண்டாசியோன் மேக்னானி ரோக்கா' (Fondazione Magnani Rocca) அருங்காட்சியகத்தின் சாளரத்தை உடைத்து நுழைந்த முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள், 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் இந்த ஓவியங்களைத் திருடிச் சென்றனர்.

 மீட்டெடுக்கப்பட்ட மூன்று ஓவியங்களின் மொத்த மதிப்பு €9 மில்லியனுக்கும் (சுமார் $14.4 மில்லியன்) அதிகம் என கலை வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Bootstrap