இந்தோனேசியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு; பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்

இந்தோனேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 38 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் (BNPB) கூற்றுப்படி, இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் மற்றும் 11 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.மொமுரே (Maumere) துறைமுக நகரில் மட்டும் 20 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் அமைந்த 'நாகேகேஓ' (Nagekeo) பகுதியை அடைய நிலச்சரிவுகள் பெரும் தடையாக உள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புக் குழுவினர் படகுகள் (Ferry) மூலம் செல்ல முயன்று வருகின்றனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.வீடுகள், சேமிப்புச் இடங்கள், அரசு கட்டிடங்கள் மற்றும் துறைமுக உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. பல இடங்களில் மின்சார விநியோகம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Bootstrap