ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு வெளிநாடு செல்லத் தடை

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் மனைவி பெகோனா கோமஸ்  ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிபதி ஜுவான் கார்போஸ் பெய்னாடோ (Juan Carlos Peinado) அவரது கடவுச்சீட்டை  ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் மாதத்திற்கு இருமுறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மாட்ரிட் பல்கலைக்கழகத்தில் தனது பதவியைப் பயன்படுத்திப் பொதுப் பணிகளைப் பெற்றுக் கொடுத்தது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது (Influence Peddling), நிதி முறைகேடு மற்றும் வணிக ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

 பிரதமர் சான்செஸ் மற்றும் அவரது ஆளும் சோசலிசக் கட்சி (PSOE) இந்தக் குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி என்றும் மறுத்துள்ளனர்.

பிரதமரின் நெருங்கிய உதவியாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவரது சகோதரர் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ஸ்பெயினின் சிறுபான்மை கூட்டணி அரசுக்கு பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Bootstrap