ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே சென்று கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தேசிய எண்ணெய் நிறுவனமான ADNOC-க்குச் சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையே (IRGC) காரணம் என்றும், இது சர்வதேச கடலோடி விதிகளுக்கு எதிரான "கடற்கொள்ளை" செயல் என்றும் அமீரக வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
ஈரானை தோற்கடித்த பிறகு, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை "அமெரிக்க பிராந்தியமாக" அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்குப் பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சகம், ஹார்முஸ் நீரிணையை "ஒரு ட்வீட் (பதிவு) மூலம் மட்டும் கைப்பற்றிவிட முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் ADNOC நிறுவனத்தின் கப்பல்கள் மீது நடத்தப்படும் 3-வது தாக்குதல் இதுவாகும். இப்போரினால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழக்கத்தை விட 17% ஆகக் குறைந்துள்ளது.