கனடாவில் காட்டுத்தீ தீவிரமடைந்து வரும் வேளையில், காலநிலை மாற்றம் மற்றும் உமிழ்வு குறைப்பு கொள்கைகள் குறித்த விவாதங்களை மத்திய அரசு தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் 3 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்து சாம்பலாகியுள்ளது. குறிப்பாக பி.சி (BC) மற்றும் ஒன்டாரியோ பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீவிர காலநிலை மாற்றச் சூழல் நிலவியபோதிலும், அரசாங்கம் நுகர்வோர் கார்பன் விலை நிர்ணயம் (carbon price), மின்சார வாகன தரநிலைகள் மற்றும் எண்ணெய்-எரிவாயு உமிழ்வு வரம்புகளைத் தளர்த்தியோ அல்லது ரத்து செய்து உள்ளது.
'விக்டோரியா பல்கலைக்கழக' (University of Victoria) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஊடகங்கள் தொழில்நுட்பங்களை நேர்மறையாகவும், அரசின் கடுமையான கொள்கைகளை எதிர்மறையாகவும் சித்தரிப்பதால், அரசாங்கம் கொள்கை சார்ந்த முடிவுகளை எடுக்கத் தயங்குகிறது.
அரசின் வலுவான கொள்கை வழிகாட்டல்கள் மற்றும் விதிமுறைகள் இல்லாமல் எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் சுற்றுச்சூழல் மாற்றத்தை முழுமையாகக் கொண்டுவர முடியாது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.