மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள்!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் மிக நீளமான சிறுநீரக கல்லை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் (14.08.2026) குறித்த சத்திர சிகிச்சை இடம்பெற்றது.

பிரேசில் நாட்டில் 2003 ஆம் ஆண்டு 1.9 கிரேம் நிறையுடைய சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் உலக சுகாதார திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது 03 கிலோ 100 கிரேம் எடையுள்ள சிறுநீரக கல் அகற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கே குறித்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன்  தலைமையில்

டொக்டர் எம். எம் ரிஷ்லி, டொக்டர் ஜே.எம்.இஹ்ஸான் டொக்டர் சீ. பிரகலாதன் உட்பட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டொக்டர் அமில ஜெயக்கடு ஆகியோர் முன்னிலையில் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Bootstrap