வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 8.15 அளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தசுவாமி பெருமானை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் இம்மகோற்சவத்தில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி மஞ்சம் திருவிழாவும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் (சப்பரம்) நடைபெறும். தேர்த்திருவிழா செப்டம்பர் 9 ஆம் திகதி காலையிலும், தீர்த்தோற்சவம் செப்டம்பர் 10 ஆம் திகதி காலையிலும் நடைபெறும்.
அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவம் நிறைவடையும்.