இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திங்கட்கிழமையான இன்று (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்கட்கிழமை என்பதால் அசோக்தாம் சிவன் கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திரண்டிருந்துள்ளனர்.
இதன்போது, மின்சார வயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்து மக்கள் நாலாபுறமும் அலறி ஓடியதால் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 07 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் பொலிஸாரும் உள்ளூர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.