நெதன்யாகுவை சந்தித்தார் அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, அவரது மருமகனும் அமெரிக்கத் தூதருமான ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, எகிப்தில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கலீல் அல்-ஹய்யா உடன் குஷ்னர்  பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினார்.

ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்ததால், ஒப்பந்தத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் காசா மீதான தாக்குதல்களை நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை துறக்கும் திட்டத்திற்கு சம்மதிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Bootstrap