தமிழ்நாடு சட்டமன்றம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி வருகின்றது.
இந்தநிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளமை அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார்.
அவர் பேசுகையில், "திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி திமுக உறுப்பினர் அடுக்கடுக்காக கூறி வந்தார். 2026இல் ஒரு ரூபாய்கூட ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் எங்கள் முதல்வர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்" என்றார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் பற்றி கூறியது அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து, கருணாநிதி பெயர் சொல்லிப் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பாக முதல்வர் விஜய் பேரவையில் மன்னிப்பு கோரினார்.
உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான். அவர் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று விதி 110 இன் கீழ் அறிவிப்புக்கு முன்னர் முதல்வர் விஜய் தெரிவித்தார்.