ஜோர்தான் மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அரசு முறை பயணமாக நாளை சீனா செல்கிறார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா செல்லும் அப்துல்லா II பின் அல் ஹுசைன் அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கையும் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது சர்வதேச அரசியல், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை, வர்த்தகம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சீன பயணத்தை நிறைவு செய்தப்பின் ஜோர்டான் மன்னர் அப்துல்லா 24ம் திகதி நாடு திரும்புகிறார்.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,''ஜோர்தான் மன்னர் அப்துல்லா II பின் அல்-ஹுசைன் அரியணையை ஏற்ற பின் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வது இது 9 ஆவது முறையாகும்.
இப்பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளார்" என்று தெரிவித்தார்.
மன்னர் அப்துல்லா II பின் அல் ஹுசைன் ஷாங்காய் மற்றும் ஷென்ட்சென் மாநகரங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.