தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா நடைபெற்றது.
இதில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய்யின் திறமையான நிர்வாகத்தையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, முதல்வர் விஜய்யின் வைரலான கை சைகையை மேடையில் செய்து காட்டி அங்கு கூடியிருந்த மாணவர்களையும், பார்வையாளர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தினார்.