ஆகஸ்ட் 16 காலை சுமார் 7:30 மணியளவில், பொதுமக்களின் வருகைக்கு முன்பாக 'ஃபிட்ஸ்' என்ற கிரிஸ்லி கரடி தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறியுள்ளது.
உடனடியாக அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, விலங்கு பராமரிப்புக் குழு மற்றும் கல்கரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த குழுவினர் இருப்பிடத்தை விட்டு வெளியேறிய கரடியை கண்டுபிடித்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு, பாதுகாப்பாக மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டது.
இச்சம்பவத்தில் பொதுமக்கள், ஊழியர்கள் அல்லது விலங்குகள் எவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டது.
ஃபிட்ஸ் மற்றும் அதன் சகோதரன் டர்னர் (Turner) ஆகிய இரு கரடிக் குட்டிகளின் தாய் வேட்டைக்காரரால் கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் இந்த மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டன.