கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு தள்ளிவைப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியில் இருக்கும் வரை கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படாது என்று பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois - PQ) கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன் (Paul St-Pierre Plamondon) அறிவித்துள்ளார்.

டிரம்ப்பின் இரண்டாவது பதவிக் காலம் முடியும் வரை (ஜனவரி 20, 2029 வரை) கியூபெக் தனிநாடு குறித்த பொதுவாக்கெடுப்பு  நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக்கின் எதிர்காலம் குறித்த விவாதம் தெளிவான மற்றும் அமைதியான சூழலில் நடக்க வேண்டும் என்றும், புதிய அரசு பொறுப்பேற்றதும் முந்தைய CAQ அரசின் சிக்கல்களைச் சரிசெய்வதற்கே அதிக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என்றும் பிளாமண்டன் சுட்டிக்காட்டினார்.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல் பதவிக்காலத்திலேயே சுதந்திரம் குறித்த கலந்தாய்வைத் தொடங்குவதாகக் கூறியுள்ள அவர், மாகாணத்தில் உள்ள ஆங்கிலம் பேசுபவர்களையும் (Anglophones) ஈர்க்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டி வருகிறார்.

 அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கருத்துக்கணிப்புகளில் பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி முன்னிலையில் உள்ளது.

Bootstrap