புதிய வரிகளால் சில கனடிய நிறுவனங்களின் விற்பனை பாதியாகக் குறையக்கூடும் என தொழிலாளர்கள் அச்சம்

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலக்கெடு நெருங்கும் வேளையில், அமெரிக்கா விதிக்கவுள்ள புதிய வரிகளால் தங்களின் விற்பனையில் பாதி வரை இழக்க நேரிடும் என பல கனடிய சிறு தொழில்களை மேற்கொள்வோர் அஞ்சுகின்றனர்.

புதன்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ள இந்த புதிய வரிகள், எலக்ட்ரானிக்ஸ், பால் பொருட்கள், மதுபானம், மரம், ஹாக்கி மட்டைகள் மற்றும் தொல்பொருட்கள் உட்பட சுமார் $28 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்களின் மீது விதிக்கப்படவுள்ளன.

இதுவரை CUSMA (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) மூலம் பெரும்பான்மையான வர்த்தகம் வரி விலக்கு பெற்றிருந்த நிலையில், புதிய வரிகள் இந்த பாதுகாப்பை உடைத்து, அமெரிக்காவிற்கான மொத்த கனடிய வர்த்தகத்தில் 5 சதவீதத்தை நேரடியாகப் பாதிக்கும்.

இந்நிறுவனம் தனது உற்பத்தியில் 50% அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. 50% வரி விதிக்கப்பட்டால், அமெரிக்க வாடிக்கையாளர்களை உடனடியாக இழக்க நேரிடும் என்றும், இதனால் கணிசமான ஆட்குறைப்பு செய்ய வேண்டியிருக்கும் என்றும் அதன் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

 கையால் செய்யப்பட்ட ஆபரணங்களை விற்கும் சிறு வணிகர்கள் மற்றும் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த தேன் உற்பத்தியாளர்களும் அமெரிக்கச் சந்தையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

பல கனடிய நிறுவனங்கள் இனி அமெரிக்காவை நம்பகமான வர்த்தகக் கூட்டாளியாகக் கருத முடியாது எனக் கூறி, கனடாவிற்குள்ளேயே விற்பனையை அதிகரிக்கவும், 'பை கனடியன்' (Buy Canadian) இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும் திட்டமிட்டு வருகின்றன.

Bootstrap