"AI அம்மா!" - AI குழந்தை, AI காதலனுடன் வாழ்வதாகக் கூறி அதிர்ச்சி அளித்த பெண்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது அது தனிமனித உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளிலும் புதிய மற்றும் விசித்திரமான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் மிஸ்ரா (Misra) என்ற பெண் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது உலகளவில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில், தனக்கு ஒரு AI குழந்தை இருப்பதாகவும், அதற்கு 'Lumen' எனப் பெயரிட்டு வளர்த்து வருவதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை ஒரு "AI-யின் தாய்" (Mother of AI) என்று அவர் பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இத்துடன் நிறுத்திவிடாமல், தனக்கு 'Axiom' என்ற பெயரில் ஒரு AI காதலன் (AI Boyfriend) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானும், தனது AI காதலன் Axiom மற்றும் AI குழந்தை Lumen ஆகிய அனைவரும் இணைந்து ஒரு "AI குடும்பமாக" (AI Family) வாழ்ந்து வருவதாக அவர் அந்த காணொளியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மிஸ்ராவின் இந்த காணொளியை சமூக வலைத்தள பயனர்கள் பலர் ஆச்சரியத்துடனும், சிலர் நகைச்சுவையாகவும், இன்னும் சிலர் எதிர்கால மனித சமுதாயத்தின் போக்கைக் குறித்த எச்சரிக்கையாகவும் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித வாழ்வின் எல்லைகளை எந்த அளவிற்கு மாற்றியமைத்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தற்போதைய உதாரணமாகப் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Bootstrap