கொல்கத்தாவில் தீ விபத்து - ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பங்களாதேஷ் நாட்டினர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், தீ விபத்தில் புகையை சுவாசித்த போது, அதன் பாதிப்பால் மயக்கமடைந்த பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை என்றும் அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap